வெள்ளரிக்காய் மோர்

தேவையான பொருட்கள்:
தயிர் – 100 கிராம்,
சிறிய வெள்ளரிக்காய் – 1
பச்சை மிளகாய் – 1,
நறுக்கிய கொத்தமல்லி – ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
• வெள்ளரிக்காய் தோலை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து மிக்ஸியில் இரண்டு முறை சுற்றி. தயிர், சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
• வடிகட்டி குளிர வைத்துப் பரிமாறவும்.
• தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
• இந்த வெள்ளரிக்காய் மோர் உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

Leave a Reply