காராமணி இனிப்பு சுண்டல்

 

காராமணி இனிப்பு சுண்டல்

தேவையான பொருட்கள் :

காராமணி – 200 கிராம்
வெல்லம் அல்லது கருப்பட்டி – 50 கிராம்
தேங்காய் துருவல் – 4 தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி

செய்முறை :

• காராமணியை வேக வைத்து கொள்ளவும்.

• பாத்திரத்தில் கருப்பட்டி அல்லது வெல்லத்தை இட்டு, அது உருகி பாகு ஆகி வரும் போது வேகவைத்த காராமணியை சேர்த்து நன்றாக கிளறுங்கள்.

• பின்பு நெய்யில் தேங்காய் துருவலை வதக்கி காராமணியில் சேருங்கள்.

• கடைசியாக ஏலக்காய் பொடியையும் கலந்து சுவையுங்கள்.

• இது சுவையும், சத்தும் நிறைந்த சிற்றுண்டி. பள்ளி குழந்தைகளுக்கு மாலை நேர உணவுக்கு ஏற்றது.

Leave a Reply