உருளை கிழங்கு பொரியல்,–சமையல் குறிப்புகள்

உருளை கிழங்கு பொரியல், தேவையான பொருள்கள்:

உருளைக்கிழங்கு – அரை கிலோ

பெரிய வெங்காயம் – 2

மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்

உப்பு,எண்ணெய் – தேவையான அளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

கடுகு, உளுந்து தலா – 1 ஸ்பூன்.

அரைக்க: தேங்காய்த் துருவல் – 2 ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன் சின்ன வெங்காயம் – 5

செய்முறை:

உருளைக்கிழங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும்., வெங்காயத்தை நீளவாக்கிலும் நறுக்குங்கள். அரைக்கக் கூறப்பட்டுள்ள பொருட்களைச் சிறிதளவு தண்ணீர் விட்டு சற்று கரகரப்பாக அரைத்து வையுங்கள். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும் கிழங்கு, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்துக் கிளறி, அரை கப் தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் வேகவையுங்கள். கிழங்கு முக்கால் பதம் வெந்ததும், அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, கிழங்கு வெந்து சுருளும் வரை கிளறி, கறிவேப்பிலைத் தூவி இறக்குங்கள்.

Leave a Reply