உருளை -வெங்காய கறி

என்னென்ன தேவை?

பெரிய உருளைக்கிழங்கு – 1/4 கிலோ,
பெரிய வெங்காயம் – 2,
பச்சை மிளகாய் – 1,
இஞ்சி – சிறிய துண்டு,
பூண்டு – 4 பல்,
கறிவேப்பிலை – சிறிது,
எண்ணெய் – 4 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம் பருப்பு – தலா 1 டீஸ்பூன்,
பெருங்காயம், மஞ்சள் தூள், சாம்பார் தூள் – தலா 1/2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு. 

எப்படிச் செய்வது?  

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளிக்கவும். அத்துடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதில் வேக வைத்து தோல் உரித்த உருளைக்கிழங்கை நறுக்கி சேர்க்கவும். அத்துடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், சாம்பார் தூள் சேர்த்து நன்றாக வதங்கியதும் எடுத்துப் பரிமாறவும். வாசனைக்கு சிறிது நெய் சேர்க்கலாம்.

Leave a Reply