அருமையான வெஜிடபிள் சூப் நூடுல்ஸ் செய்வது எப்படி

தேவையான பொருட்கள் :
நூடுல்ஸ் – கால் கப்,
கேரட் – ஒன்று,
குடைமிளகாய் – ஒன்று,
வெங்காயத்தாள் – ஒன்று,
பச்சை மிளகாய் – ஒன்று,
சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
[பாட்டி மசாலா] மிளகுத்தூள் – தேவைக்கேற்ப,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை :
கேரட், குடைமிளகாய், வெங்காயத்தாள், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சோள மாவை கால் கப் தண்ணீரில் கரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கேரட், குடைமிளகாயை முக்கால் வேக்காடு பதத்தில் வதக்கவும்.
அடுத்து அதில் தண்ணீர் 2 கப் சேர்த்து, கொதிக்கும்போது நூடுல்ஸை சேர்க்கவும்.
நூடுல்ஸ் வெந்த பிறகு பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீரில் கரைத்த சோள மாவை சேர்த்துக் கொதிக்கவைக்கவும்.
சூப் சிறிது கெட்டியாக வந்தவுடன், அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சைச் சாறு, வெங்காயத்தாள் சேர்த்து… உப்பு, [பாட்டி மசாலா] மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.
அருமையான நூடுல்ஸ் வெஜிடபிள் சூப் ரெடி.

Leave a Reply