ஸ்நாக்ஸ் கார்ன் வெஜிடபிள் ரோல்

மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு கார்ன் வெஜிடபிள் ரோல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

சூப்பரான ஸ்நாக்ஸ் கார்ன் வெஜிடபிள் ரோல்
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 1 கப்
உருளைக்கிழங்கு – 2
முட்டைக்கோஸ், பீன்ஸ், கேரட் – 1 கப்
சோளம் – 1 கப்
கடுகு, உளுந்தப்பருப்பு, உப்பு – தேவையான அளவு
[மஞ்சள் தூள்] மிளகு தூள் – சிறிதளவு
[மஞ்சள் தூள்] கரம் மசாலா – தேவையான அளவு
வெங்காயம் – 2
தக்காளி – 2
கொத்தமல்லி – சிறிதளவு,
[மஞ்சள் தூள்] மஞ்சள் பொடி – சிறிதளவு

செய்முறை :

கோதுமை மாவில் சிறிது உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும்.

கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம், முட்டைக்கோஸ், பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

சோளத்தை உதிர்த்து கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவேண்டும்.

ஒரு அகலமான வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும்.

இரண்டும் நன்றாக வதங்கியதும் பீன்ஸ், கேரட், பச்சை பட்டாணியை போட்டு நன்றாக வதக்க வேண்டும். வதங்கிய பிறகு அதில் [மஞ்சள் தூள்] மஞ்சள் பொடி, [மஞ்சள் தூள்] கரம் மசாலா, [மஞ்சள் தூள்] மிளகுத்தூள், தேவையான உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.

மசாலா வாசனை போனவுடன், மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து இறுதியாக கொத்தமல்லி போட்டு இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிசைந்து வைத்த மாவை சப்பாத்தி போல் உருட்டி செய்த மசாலாவை மாவிற்கு நடுவில் வைத்து பூரணம் போல் மடித்து வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து ரோல்களை போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

சுவையான கார்ன் வெஜிடபிள் ரோல் ரெடி.

Leave a Reply