எளிமையனா பீட்ரூட் சப்பாத்தி செய்ய ரெடியா நீங்க

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் – 2

கேரட் – 2

உருளைக்கிழங்கு – 2

பச்சை பட்டாணி – அரை கப்

கோதுமை மாவு – தேவையான அளவு

பச்சை மிளகாய் – 6

செய்முறை:

பச்சை மிளகாயை எடுத்து அரைத்துக் கொள்ளவேண்டும். உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பீட்ரூட், கேரட் இரண்டையும் துருவிக் கொள்ளவேண்டும். குக்கரில் துருவிய கேரட், பீட்ரூட், ஊறிய பட்டாணி, உருளைக்கிழங்கு ஆகியவற்றை ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு வேகவைக்கவேண்டும்.

வேக வைத்தது ஆறிய உடன் தேவையான அளவு கோதுமை மாவு, அரைத்த பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்துக் கொள்ளவேண்டும்.

அதை தேய்த்து வட்டமாக சப்பாத்தி போல செய்துக் கொள்ளவேண்டும். அதை தோசை கல்லில் போட்டு நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது சுவையான பீட்ரூட் சப்பாத்தி ரெடி….

இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது வெங்காய தயிர் பச்சடி செய்து அதனுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

Leave a Reply