முட்டைக்கொத்து செய்வது எப்படி

றொட்டி – 5 பெரியது
முட்டை – 3
வெங்காயம் – 1 (பெரியது )
தக்காளி – 1 (சுமாரானது )
சீரகம் – 1தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
கருவேப்பிலை, கொத்தமல்லி இலை – சிறிது
எண்ணெய் – தளிப்புக்கு
பச்சைமிளகாய் – 2
,மசாலாதூள் – சிறிது
மஞ்சள் தூள் – சிறிது
மிளகுதூள் – சிறிது

முதலில் வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
பரோட்டாவை சுட்டு சிறியதாக பிய்த்து வைக்கவும்.
பின் அடுப்பில் சட்டியைவைத்து எண்ணெய் ஊற்றி
சீரகம், போட்டு தாளித்து, கருவேப்பிலை, வெங்காயம்,போட்டு வதக்கவும். பின் பச்சைமிளகாய் தக்காளியை சேர்த்து வதக்கி ,மசாலாதூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதங்கியதும்
பரோட்டாவை சேர்த்து கிளறவும்.
முட்டையை உடைத்து ஊற்றி
அதில் மிளகுதூள், உப்பு சேர்த்து நன்கு அடித்து பரோட்டா கலவையின்
நடுவில் ஊற்றி நன்கு கிளறி 3 நிமிடம் கழித்து இறக்கவும் கடைசியில் கொத்தமல்லி இலையை சேர்க்கவும்

Leave a Reply