கோதுமை பிரெட் உப்புமா

என்னென்ன தேவை?

கோதுமை பிரெட் – 1 பாக்கெட்,
கேரட், பட்டாணி, பீன்ஸ் – மூன்றும் சேர்த்து 250 கிராம்,
பச்சை மிளகாய் – 4,
வெங்காயம் – 2,
கடலைப் பருப்பு, கடுகு, உளுத்தம் பருப்பு, இஞ்சி, மஞ்சள் தூள் – சிறிதளவு,
உப்பு, எண்ணெய், மிளகாய் தூள் – தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?  

பிரெட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கிளறி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு போட்டு தாளிக்கவும். அதில் வெங்காயத்தை வதக்கி, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். பின் காய்கறிகளைப் போட்டு நன்றாக வதக்கவும். சிறிது தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். வெந்தவுடன் அதில் பிரெட் துண்டுகளைப் போட்டு நன்றாக கிளறி மூடி போட்டு வேகவிடவும். வெந்ததும் சூடாகப் பரிமாறவும்.

Leave a Reply