சம்பா ரவை சாம்பார் சாதம்

என்னென்ன தேவை?

மல்டி கிரெய்ன் கோதுமை ரவை – ஒரு கப்,
துவரம் பருப்பு – 1/2 கப்,
சின்ன வெங்காயம் – 7,
கத்தரிக்காய் – 1,
தக்காளி – 1,
கேரட் – 1/2 துண்டு,
முருங்கைக்காய் – பாதி துண்டு,
பச்சை மிளகாய் – 1,
சாம்பார் தூள் – 2 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் – 1/2 டீஸ்பூன்,
புளி – தேவைக்கேற்ப, கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு – தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?  

துவரம் பருப்பை 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து குழைய வேக வைக்கவும். காய்கறிகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். ரவையை தண்ணீரில் களைந்து அதனுடன், பருப்பு, நறுக்கிய காய்கறிகள், வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, சாம்பார் தூள், பச்சை மிளகாய், 1/4 டீஸ்பூன் பெருங்காயத் தூள், உப்பு சேர்க்கவும். அதில் புளியை அரை கப் தண்ணீரில் கரைத்துச் சேர்க்கவும். இதை குக்கரில் வைத்து மூன்று விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும். பின்புகடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து சாதத்தில் கொட்டி, கொத்தமல்லி இலை தூவிப் பரிமாறவும்.

Leave a Reply