மரவள்ளிக்கிழங்கு சேமியா அடை

மரவள்ளிக் கிழங்கு சேமியா அடை தயாரிக்க தேவையான பொருட்கள் வருமாறு:-

மரவள்ளிக் கிழங்கு சேமியா (உடைத்தது) -1 கோப்பை,
கடலைப்பருப்பு- ½ கோப்பை,
துவரம் பருப்பு- ½ கோப்பை,
உப்பு- 2 தேக்கரண்டி,
பச்சை மிளகாய்- 7 எண்ணிக்கை,
கறிவேப்பிலை, பெருங்காயம்- சிறிதளவு,
எண்ணெய்- சிறிதளவு,
கடுகு, உளுத்தம்பருப்பு – தாளிக்க

செய்முறை:-

• துவரம் பருப்பையும், கடலை பருப்பையும் 4 மணி நேரம் ஊற வைத்து ¼ கோப்பை தண்ணீர் சேர்த்து, இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும். அவ்வாறு அரைக்கும் போதே பச்சை மிளகாய், பெருங்காயம் உள்ளிட்ட பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

• சேமியாவில் ஒரு கோப்பை தண்ணீர்விட்டு அதை, அரைத்த பருப்புடன் உப்பு சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

• பிறகு வாணலியை வைத்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து கலந்த வைத்துள்ள மாவில் கொட்டி நன்றாக கலக்கவும்.

• தோசை கல்லை அடுப்பில் வைத்து மாவை தோசைகளாக ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

• இப்போது மரவள்ளிக்கிழங்கு அடை தயார் ஆகிவிடும். இது மிகவும் சுவையான உணவு ஆகும்.

Leave a Reply