உடலுக்கு ஆரோக்கியம் தரும் வேப்பம்பூ சூப்

வேப்பம்பூ சூப் உடலுக்கும் மிகவும் நல்லது. மாதம் இருமுறை கட்டாயம் வேப்பம்பூ சூப் செய்து குடிப்பது மிகவும் நல்லது.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் வேப்பம்பூ சூப்
தேவையான பொருட்கள் :

வேப்பம் பூ – 4 டீஸ்பூன்,
வெண்ணெய் – 4 டீஸ்பூன்,
காய்கறிகள் வேக வைத்த தண்ணீர் – 1 கப்,
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்,
பனங்கற்கண்டு – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை :

* வாணலியில் வெண்ணெய் காய்ந்ததும், அதில் வேப்பம் பூவைப் போட்டு வறுக்கவும்.

* இதனுடன் பனங்கற்கண்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விடவும்.

* பின்பு இறக்கி ஒரு மெல்லிய துணியில் வடிகட்டவும்.

* இதனுடன் காய்கறிகள் வேக வைத்த தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு கலந்து பருகலாம்.

* கசப்பே இல்லாமல் மிகவும் சுவையாக இருக்கும். அனைத்து வயதினருக்கும் ஏற்ற சூப் இது.

Leave a Reply