கேரளா கடலைப்பருப்பு செய்முறை விளக்கம்

கேரளாவில் ஓணம் பண்டிகையில் போது செய்யப்படும் பல்வேறு வகையான ரெசிபிக்களில் ஒன்று தான் கேரளா பருப்பு பாயாசம். இதை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

கேரளா கடலைப்பருப்பு செய்முறை விளக்கம்
தேவையான பொருட்கள் :

கடலைப்பருப்பு – 1/2 கப்
நாட்டுச்சர்க்கரை – 1/2 கப்
தேங்காய் பால் – 1/2 கப்
பால் – 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி – தேவைக்கு
சுக்கு பொடி – 1 சிட்டிகை
நெய் – தேவைக்கு

செய்முறை :

* நெய்யில் முந்திரியை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* நாட்டுச்சர்க்கரையை ஒரு அடிகனமாக பாத்திரத்தில் கொட்டு அதில் தேவையான தண்ணீர் ஊற்றி சர்க்கரை நன்றாக கரையும் வரை சூடேற்றி, பின் அதனை வட்டிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, குக்கரில் போட்டு, அதில் போதிய அளவில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 5 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். (பருப்பு நன்கு மசியும் அளவில் வேக வைக்க வேண்டாம்.)

* வடிகட்டி வைத்துள்ள வெல்லப் பாகை மீண்டும் அடுப்பில் வைத்து, 2 நிமிடம் சூடேற்றி, அதில் வேக வைத்துள்ள கடலைப் பருப்பு சேர்த்து கரண்டியால் பருப்பை மசித்து விட வேண்டும். பருப்பானது வெல்லப் பாகுவுடன் நன்கு ஒன்று சேர்ந்தவுடன், அதில் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

* பாயாசம் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுக்கு பொடி, பால் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து முந்திரியை தூவி இறக்கினால், கேரளா பருப்பு பாயாசம் ரெடி!!!

* விருப்பப்பட்டால் தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து அதையும் பாயாசத்தில் சேர்க்கலாம்.

Leave a Reply