கோதுமை ரவை – பாசிப்பயிறு பொங்கல்

பாசிப்பயிறு பொங்கல் தயார் செய்ய தேவையான பொருட்கள் வருமாறு:-
கோதுமை ரவை-1 கப்,
பாசிப்பயிறு- ½ கப்,
நெய்- ஒரு தேக்கரண்டி,
முந்திரி பருப்பு- சிறிதளவு,
பெருங்காயம்- ஒரு சிறிய துண்டு,
மிளகுத்தூள்- ஒரு தேக்கரண்டி,
இஞ்சி- சிறிய துண்டு,
உப்பு தேவையான அளவு.
செய்முறை:-
* ஒரு தேக்கரண்டி நெய்யில், பாசிப்பயிறை பொன் நிறமாக வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து கோதுமை ரவை, வறுத்த பாசிப்பயிறு, உப்பு, நறுக்கிய இஞ்சி, மிளகுத்தூள், பெருங்காயம் ஆகியவற்றை போட்டு வேக வைக்க வேண்டும்.
* தண்ணீர் வற்றி நன்கு வெந்ததும் வறுத்த முந்திரி பருப்புகளை அதில் போட்டு, பொங்கல் பதத்தில் இறக்க வேண்டும்.
* இப்போது சுவையான பொங்கல் தயார் ஆகிவிடும். பாசிப்பயிறு, கோதுமை ரவையை பயன்படுத்தி இந்த பொங்கல் தயார் செய்யப்படுவதால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்கிறது. சிறுவர்கள் முதல் எல்லாரும் சாப்பிடலாம்.

Leave a Reply