காய்கறி அவியல்! உணவே மருந்து!!

என்னென்ன தேவை?
கேரட், பீட்ரூட், முள்ளங்கி (ஒரே அளவில் சிறுதுண்டுகளாக நறுக்கியது) – மூன்றும் சேர்த்து 100 கிராம், மிளகுப்பொடி – 1 சிட்டிகை, உப்பு – தேவைக்கேற்ப, மஞ்சள் – 1 சிட்டிகை, மிளகாய்ப் பொடி – 1 சிட்டிகை, எண்ணெய் – அரை டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை – தாளிக்க.

எப்படிச் செய்வது?
காய்கறிகளின் மேல் உப்புத் தண்ணீர் தெளித்து, மஞ்சள் பொடி தூவி, இட்லித்தட்டில் 10 நிமிடங்கள் வேக விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வேக வைத்த காய்கறிகளைச் சேர்த்து, மிளகுப்பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்துப் பிரட்டி அப்படியே பரிமாறவும். இந்தக் காய்கறி அவியலை காலை அல்லது மதிய உணவுக்குக் கொடுக்கலாம்.
என்னென்ன சத்து?
கேரட் சருமத்துக்கும் பார்வைக்கும் நல்லது. பீட்ரூட் ஹீமோகுளோபினை அதிகரித்து ரத்த ஓட்டத்தை சீராக்கும். முள்ளங்கி நீரைப் பிரித்து, உடலை சுத்தப்படுத்தும்.

Leave a Reply