பால் அப்பம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

4 பால் அப்பம்
தேவையான பொருட்கள்:
1 சுண்டு பச்சை அரிசி, சிறிய வெள்ளை ரகம்
½ செ.மீ. தடிப்பமுள்ள கரைநீக்கப்பட்ட 1துண்டு பாண்
குவித்து 1 தேக்கரண்டி. சீனி
¼ சுண்டுக்குச் சிறிது கூடிய இளநீர்
பெரிய பாதித் தேங்காய்
1 தே.க. உப்புத்தூள்
1ஃ3 தே.க அப்பச்சோடா

செய்முறை:
பச்சை அரிசியை நன்றாகக் கழுவி, 6-8 மணிநேரம் ஊறவிட்டு, தண்ணீரில்லாமல் வடித்து, பாண், சீனி, இளநீர் என்பவற்றுடன் பிளென்டர் அல்லது ஆட்டுக்கல்லில் போட்டு, பட்டு ரவைபோன்ற சிறு குறுணிகள் இருக்கும்படி, சிறிது தொய்ந்த பதத்தில் அரைத்து வழித்து, ஒரு அளவான பானையில் போட்டு, 5 நிமிடங்கள் நன்றாக பிசைந்து, வெக்கை பிடிக்கக்கூடியதாக விஜய்தமிழ் ஸ்பெஷல்அணைந்த அடுப்பங்கரை, அல்லது மெல்லிய சூட்டில் அணைக்கப்பட்ட அவிண்(ழஎநn) அல்லது இளஞ்சூடாகவுள்ள நீரினுள் வைத்து, 12 மணிநேரம் புளிக்கவிடவும் இளஞ்சூடு சற்று நேரமாகிலும் பிடிக்காவிட்டால் மா புளிக்கவே மாட்டாது.
மா புளித்தவுடன், தேங்காயைத் துருவி, சிறிதுசிறிதாகத் தண்ணீர் விட்டு 2 தரம் பாலைப் பிழிந்து. தடித்த பாலாக 1ஃ3 சுண்டுவரை எடுத்து வேறாக வைத்துக் கொண்டு, மறுபடியும் சிறிதுசிறிதாகத் தண்ணீர் விட்டு 2-3 தரம்; பிழிந்து. 4ஃ3 சுண்டு வரையிலான பால் எடுத்து, மாவில் விட்டு, உப்பு, அப்பச்சோடா என்பவற்றையும் போட்டு, நன்றாகக் கரைத்துக் கொள்க. பின்னர், கீடீழ கொடுத்துள்ள முறைப்படி அப்பத்தை வார்த்து வேக விட்டு எடுக்கவும்

 

5 பால் அப்பம் வார்க்கும் விதம்
ஒரு பழகிய அப்பத்தாச்சியை மிதமாக எரியும் அடுப்பின் மீது வைத்து, காய்ந்தவுடன், ஒரு துணிப் பொட்டலத்தை நல்லெண்ணெயில் தொட்டு, தாச்சியின் உட்புறம் விஜய்தமிழ் ஸ்பெஷல்முழுவதிலும் இலேசாக தேய்த்து ப+சி, 4 மேசைக்கரண்டியளவு மாவை ஒரு கரண்டியினால் அள்ளி வார்க்கவும், வார்த்தவுடன் தாச்சியை தூக்கி சற்று சரித்து, ஒருமுறை வட்டமாக சிலாவிவிட்டு. மறுபடியும் அடுப்பில் வைத்து, வேறாக வைத்த தடித்த தேங்காய்ப்பாலில் 2 தேக்கரண்டியளவை நடுவில் பரவலாகவிட்டு ஒரு இறுக்கமான மூடியினால் கூடி வேகவிடவும். “சிலுசிலு” என்று மூடியிலிருந்து நீர் சொட்டும் சத்தம் கேட்டவுடன் திறந்து பார்த்து, வெந்த அப்பத்தை ஒரு தட்டகப்பையினால் எடுத்து, ஒரு பெரிய தாம்பாளத்தில் சுற்றிவர அடுக்கி வருவும். புhல் இப்பிக் கொள்ளாதபடி, ஒன்றினது ஓரம் மற்றதின்மீது படியும்படி வைத்து, இன்னொரு தாம்பளத்தினால் மூடி விடவும்.

6 பால் அப்பத்துக்கு மாவைக் குழைக்கும் வேறு விதங்கள்
துனிப் பச்சையரிசிக்குப் பதிலாக, ½ சுண்டு பச்சையரிசியை, ½ சுண்டு புழுங்கலரிசியுடன் கலந்து, ஊறவிட்டு, செய்முறை 4 என்பதில் உள்ள ஏனைய சாமான்களைப் போட்டு, அதே பதத்தில் அரைத்து, புளிக்க வைத்து, அப்பத்தைச் சுட்டுக் கொள்க.
ஒரு சுண்டு பச்சையரிசியை ஊறவிட்டு, வடித்து, ¼ சுண்டு சோற்றுடன் கலந்து, ½ தேக்கரண்டி ஈஸ்ற், 1 தேக்கரண்டி சீனி என்பவற்றை ¼ சுண்டு வெந்நீரில் கரைத்து விட்டு, செய்முறை 4 என்பதில் கொடுததுள்ள பதத்திற்கு அரைத்து, புள்க்கவிட்டு, அதே விதத்தில் சுட்டெடுக்கவும்.
¾ சுண்டு புழுங்கலரிசியை ஊறவிட்டு, வடித்து, பாண், சீனி, இளநீர் என்பவற்றுடன் அரைத்து, ½ சுண்டு அவித்தரித்த கோதுமை மாவுடன் சேர்த்துப் பினைந்து, புளிக்கவிடடு;, செய்முறை 4 என்பதில் உள்ளபடி அப்பத்தை சுட்டெடுக்கவும்.
செய்முறை 4 என்பதில் கொடுததுள்ளசாமான்களை உபயோகிக்கவும்,அரிசியை ஊறவிட்டு, வடித்து, இடித்து, பெரிய கண்களுள்ள அரிதட்டனால் அரித்து, மாவை பதமாக வறுத்து எடுக்கவும். இளநீரில் பாண், சீனி என்பவற்றைக் கரைத்து, இளஞ்சூடாகவுள்ள மாவில் விட்டு, நன்றாகப் பினைந்து புள்க்கவிட்டு, அதேவிதத்தில் அப்பத்தை சுட்டெடுக்கவும்.

Leave a Reply