அரைத்த முறுக்கு

என்னென்ன தேவை?

புழுங்கலரிசி – 4 கப்,
உளுந்து – 1 கப்,
பெருங்காயம் – தேவைக்கு,
சீரகம், வெள்ளை எள் – தலா 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 6,
வெண்ணெய் – 30 முதல் 40 கிராம்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

அரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து, வடித்து, காய்ந்த மிளகாய் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைக்கவும். உளுந்தை நன்கு வறுத்து நைஸாக பவுடராக்கி சலித்து வைக்கவும். அரைத்த அரிசி மாவுடன் உளுந்து மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். அத்துடன் உப்புச் சேர்த்து கெட்டியாக முறுக்கு மாவு பதத்துக்குப் பிசையவும். இந்த மாவுடன் வெண்ணெய், எள், சீரகம், பெருங்காயம் சேர்த்து நன்கு கலக்கவும். சூடான எண்ணெயில் மிதமான தீயில் முறுக்காகப் பிழிந்து பொரித்து எடுக்கவும். வடித்து ஆறியதும் டப்பாவில் போட்டு வைக்கவும். கரகரப்பான முறுக்கு ரெடி.நமக்குப் பிடித்த அச்சில் முறுக்கு பிழியலாம்.

Leave a Reply