:கேரட் சாலட்

தேவையான பொருட்கள்:

துருவிய கேரட் – 1 கிலோ
முளைக்கட்டிய பச்சைப்பயறு – 1/4 கிலோ
தேங்காய்த் துருவல் – 1 கப்
எலுமிச்சம்பழம் – 1
நறுக்கிய குடை மிளகாய் – 50 கிராம்
நறுக்கிய கொத்தமல்லி – ஒரு கட்டு
உப்பு, மிளகுப்பொடி – தேவைக்கு ஏற்ப

செய்முறை:

* திருகிய கேரட், முளைகட்டிய பச்சைப்பயறு, தேங்காய்த் துருவல், நறுக்கிய குடை மிளகாய், கொத்தமல்லி இவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும்.

* அதன் மீது எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து சேர்த்து, உப்பு, மிளகுப்பொடி கலந்து மீண்டும் கலக்கவும்.

* ஆரோக்கிய குளிர்ச்சியான உணவு ரெடி!

Leave a Reply