நாட்டுத்தக்காளி சாறு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :

தக்காளி – 5
பூண்டு – 50 கிராம்
சீரகத்தூள் – அரை ஸ்பூன்
தனியா தூள் – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
மிளகு தூள் – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
நெய் – 2 ஸ்பூன்

செய்முறை :

• தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

• கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

• பூண்டை தோலுடன் ஒன்றும்பாதியாக தட்டிவைக்கவும்.

• கடாயில் நெய் ஊற்றி அதில் பூண்டை போட்டு தாளித்த பின் தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும்.

• அடுத்து தனியா தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

• தக்காளி நன்றாக வெந்ததும் வடிகட்டியில் வடித்து சாறை மட்டும் தனியாக எடுக்கவும்.

• வடிகட்டிய சாறில் மிளகுதூள், கொத்தமல்லி தழை சேர்த்து பருகவும்.

• இந்த நாட்டுத்தக்காளி மிகவும் சுவையாக இருக்கும்.

Leave a Reply