இடியப்பம் செய்வது எப்படி?

இடியப்ப குறிப்புக்கள்:
மாவை இருமுறை அரித்தல் வேண்டும். மா எவ்வளவுக்குப் பட்டுப் போல இருக்கின்றதோ, அவ்வளவுக்கு இடியப்பமும் ப+ப்போலமெதுமையாகவிருக்கும். மாவில் கப்பி இருந்தால், இடியப்ப உரலிலுள்ள கண்கள் அடைபட்டு, பிழிவதும் சிரமமாகவிருக்கும்.

மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, கொதித்துக் கொண்டிருக்கம் நீரைப் பரவலாக உற்றி, ஒரு அகப்பைக் காம்பினால் கிளறிச் சேர்த்து, கட்டிகள் இல்லாதபடி தயாரித்தல் வேண்டும்.
கிளறிச் சேர்த்த மா, அமதுமையாகவும், கையில் ஒட்டாத பதத்திலும்இருத்தல் வேண்டும். தேவையென்றால் இதனைச் சிறிது ஆறவிட்டு, மெதுமையாகும்வரை பினைந்துங் கொள்ளலாம்.

கூடுதலாக அடியப்பம் அவிக்கும் வேளைகளில், மாவைக் கிளறிச் சேர்த்த பின்னர், காய்ந்து போகாமல் இருப்பதற்குஈ ஒரு ஈரத் துணியால் மூடி வைத்துக் கொண்டு, எடுத்துப் பிழியவும்.
இடியப்பத்தட்டுகளைக் கழுவி, உலர்த்தி, அல்லது ஆவியில் வைத்தெடுத்து, இலேசாக நெய் அல்லது எண்ணெய் ப+சி, இடியப்பத்தை பிழிதல் வேண்டும். இப்படிச் செய்தால், மா தட்டில் ஒட்ட மாட்டாது.
அவித்த இடியப்பங்களை ஒரு ஈரமற்ற தட்டில் பரவி, சிநிது ஆறிய பிறகு, பரிமாறும் பாத்திரத்தில் அடுக்கி மூடிக்கொள்க.

செம்மையாக அவிந்த இடியப்பத்தை விரலினால் அமுக்கிப் பார்த்தால், பதிவு எற்படாது, எடுக்கும்போது உலிர்ந்துங் கொள்ளாது.
அவித்த இடியப்பங்களை, அழகிய ஓலைப்பெட்டி அல்லது சிறிய துவாரங்களள்ள ஏதனத்தில் அடுக்கி மூடி வைத்தால், அடியில் உள்ளவை வியர்வையினால் பாதிக்கப்பட மாட்டாது.

இடியப்பத்துக்கு மாவைக் கிளறும் முறைகள்:
வறுத்த அரிசிமா அல்லது அவித்து ஆறிய அரிசிமாவில் இடியப்பம் தாயாரிப்பதற்கு, கொதித்துக் கொண்டிருக்கும் நீரை விட்டுக் கிளறிச் சேர்த்து பிழியவும்.
உடனே வறுத்த அல்லது அவித்த, நல்ல சூடாகவுள்ள அரிசிமா என்றால், தண்ணீர் விட்டுக் கிளறிச் சேர்த்துப் பிழியவும்.
அதிக தவிடுள்ள அரிசியில் இடித்து வறுத்த மாவென்றால், அவித்த கோதுமைமாவைச் சமமாகக் கலந்து, கொதிக்கும் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, ஆவியை அடங்கவிட்டு, பிறகு மாவில் விட்டுக் கிளறிச் சேர்த்துப் பிழியவும்.
அவித்து ஆறிய கோதுமை மாவிற்கும், கொதிக்கும் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, ஆவியை அடஙகவிட்டு, பிறகு மாவில் விட்டுக் கிளறிச் சேர்த்துப் பிழியவும்.
மில்லில் அரைத்த அரிசிமாவைஈ ஏற்கனவே சற்று வறுத்து வைத்து, கொதித்துக் கொண்டிருக்கும் நீரை விட்டுக் கிளறிச் சேர்த்தல் வேண்டும்.
குரக்கன்மா, சோளமா ஆகியவற்றிற்குஈ கொதிநீரை உபயோகிக்கவும்.
துண்ணீருக்குப் பதிலாகஈ தேங்காய்ப்பாலை உபயோகித்தும் மேலே கொடுத்துள்ள முறைகளின்படி இடியப்பம் அவித்துக்கொள்ளலாம்.

Leave a Reply