ஆரஞ்சி சிக்கன் டிரம்ஸ்டிக்:

இது ஒரு எளிமையான மற்றும் ருசியான, பசியை தூண்டும் உணவாகும். இது ஒரு டம்ளர் வைன் உடன் சேர்த்து சாப்பிட ஏற்ற டிஷ். முழுமையான இரவு உணவிற்கு, க்ரன்ச்சி ப்ரெட்ஸ்டிக்ஸ், மற்றும் சூப் இதை சேர்த்து இதனுடன் பரிமாற ஏற்றது.
தேவையான பொருட்கள்:.
சிக்கன் டிரம்ஸ்டிக் – 8, தோல் நீக்காமல்.
சில்லி வினிகர் – 2 தேக்கரண்டி.
சிவப்பு மிளகு – 1 தேக்கரண்டி
ஆரஞ்சுப் பழப் பாகு /ஆரஞ்சு ஜாம் – ¼ கப்.
ஆலிவ் எண்ணெய் – 1 டீஸ்பூன்
கருப்பு மிளகு – சுவைக்கேற்ப‌.
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
ப்ராய்லரில் ஓவன் ரேக்கை 6 அங்குலத்திற்கு மேலே வைக்கவும்..
ஒரு சிறிய கிண்ணத்தில், மேலே கூறிய அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து கொள்ளவும் சிக்கனையும் சேர்த்து.
ப்ராய்லரில் நான் ஸ்டிக் அலுமினிய தாளின் மீது பேக்கிங் தாளை வரிசையாக வைக்கவும்.
சிக்கன் கலவையின் மீது எண்ணெய்யை தூவி விடவும், இதை நன்கு திருப்பி போட்டு ஒரே மாதிரியாக கலந்துள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்..
இதன் மீது உப்பு மற்றும் மிளகை சுவைக்கேற்ப தூவி சுமார் 6 முதல் 7 நிமிடங்கள் ப்ராய்லரில் வைக்க வேண்டும்.
ஒரு பேஸ்டிங் ப்ரஷ்ஷை பயன்படுத்தி, சிக்கன் மீது ஆரஞ்சுப் பழப் பாகை தடவவும்..
இதை திருப்பி போட்டு ப்ராயல்ரில் சம நேரம் அல்லது கோழி கிட்டத்தட்ட வேகும் வரை வைக்கவும்.
இன்னும் சிறிது ஆரஞ்சுப் பழப் பாகை இதன் மேல் தட்வி மேலும் 45 விநாடிகள் ப்ராய்லரில் வைக்கவும்.
மீதமுள்ள ஆரஞ்சுப் பழப் பாகை கோழி மீது தடவி கேரமலைஸ் ஆகும் வரை வைக்கவும். இதற்கு 2 நிமிடங்கள் எடுக்கும்.
இதை சிவப்பு முட்டைக்கோஸ் கோல்ஸ்லாவ் கொண்டு சூடாக பரிமாறவும்..

Leave a Reply