கொள்ளு- உளுத்தம் பருப்பு சுண்டல்

தேவையான பொருட்கள் :
கொள்ளு (காணம்)- 100 கிராம்,
உளுந்தம் பயறு- 150 கிராம்,
பச்சை மிளகாய்-4 எண்ணிக்கை,
உப்பு தேவையான அளவு,
தேங்காய் துருவல்- 2 ஸ்பூன்,
கொத்தமல்லி இலை சிறிதளவு,
இஞ்சி – சிறிய துண்டு,
எலுமிச்சம் பழம்-1,
கடுகு- 1 தேக்கரண்டி,
எண்ணெய்- சிறிதளவு.

செய்முறை:-
• கொள்ளு, பயறு ஆகிய இரண்டையும் லேசாக சூடாகும் வரை வறுத்துக் கொள்ளவும். பிறகு 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு குக்கரில் 8 நிமிடங்களில் உப்பு சேத்து வேக வைத்துக் கொள்ளுங்கள்.
• வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளித்துக் கொள்ள வேண்டும். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கி, அதன் பின்பு கொள்ளு, பயறு போட்டு நன்றாக கிளறி இறக்க வேண்டும்.
• எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து நறுக்கிய கொத்தமல்லி இலையை அலங்காரமாக தூவி பரிமாறலாம்.
* இது ஒரு சத்தான உணவு ஆகும்.

Leave a Reply