பானிபூரி

தேவையானவை:
  • பூரி- 1 பாக்கெட்
  • சன்னா- 50 கிராம்
  • கொத்தமல்லி- சிறிதளவு
  • வெங்காயம்-2
  • ரசம் செய்ய:-
  • தண்ணீர் – ஒரு கப்
  • புளி- நெல்லிகாய் அளவு
  • ஜெல்ஜீர் பவுடர்- சிறிதளவு
  • எலுமிச்சை சாறு- ஒரு ஸ்பூன்
  • உப்பு-தேவைக்கு
  • சுகர்- அரை ஸ்பூன்
  • ரெட்சில்லி பவுடர்- சிறிதளவு
  • அமெச்சூர் பவுடர்-சிறிதளவு

செய்முறை:

  • சன்னாவை நன்கு வேக வைத்து தோலுரித்து உப்பு தூவி நன்கு மசித்துக்கொள்ளவும்
  • வெங்காயம்,கொத்தமல்லியை பொடியாக நறுக்கி ஒரு தட்டில் வைக்கவும்
  • தண்ணீரில் புளியை கால் மணி நேரம் ஊற வைத்து பின் கரைக்கவும்.
  • அத்துடன் மற்ற பொருட்களை சேர்த்து கலக்கவும். இதனை ஒரு கப்பில் வைக்கவும்
  • பூரியின் மேல் துளையிட்டு சிறிதளவு சன்னா, வெங்காயம், கொத்தமல்லி, தேவைக்கு ரசம் ஊற்றி சாப்பிட கொடுக்கலாம்.

Note:

பரிமாறும் போது தட்டில் ரசம், கொத்தமல்லி,வெங்காயம், சன்னா, பூரி ஆகியவற்றை தனிதனியாக வைத்து பரிமாறவும்

Leave a Reply