உருளைக்கிழங்கு முறுக்கு

முறுக்கில் பல வெரைட்டிகள் உள்ளது. அதில் ஒன்று தான் உருளைக்கிழங்கு முறுக்கு. இந்த முறுக்கு செய்வது மிகவும் ஈஸி. அதை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – 1 கப்
உருளைக்கிழங்கு – 1
வெண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 3/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து 5 விசில் விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின் அதன் தோலை நீக்கவிட்டு, அதனை மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பௌலில் அரிசி மாவு, வெண்ணெய், சீரகம், பெருங்காயத் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் உருளைக்கிழங்கு பேஸ்ட் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அதில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

எண்ணெயானது சூடாவதற்குள், ஒரு தட்டில் துணியை விரித்துக் கொண்டு பின் முறுக்கு அச்சை எடுத்து, அதனுள் எண்ணெய் தடவி, அதனுள் சிறிது முறுக்கு மாவை வைத்து தட்டின் மேல் முறுக்கு போன்று சுற்ற வேண்டும்.

பின் அதனை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப்போன்று அனைத்து மாவையும் முறுக்குகளாக சுட்டு எடுக்க வேண்டும். இப்போது சுவையான மற்றும் மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு முறுக்கு ரெடி!

Leave a Reply