ஆல்வள்ளி கோஃப்தா கிரேவி !

தேவையானவை – கோப்தா செய்ய: ஆல்வள்ளி (மரவள்ளிக் கிழங்கு) – கால் கிலோ (வேக வைக்கவும்), நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் – தலா 2 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் – ஒரு கப், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, ரஸ்க் தூள் – ஒன்றரை கப், எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.
பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்க: மைதா, சோள மாவு – தலா 2 டீஸ்பூன்.
கிரேவி செய்ய: வெங்காய விழுது – 4 டீஸ்பூன், தக்காளி விழுது – ஒரு டீஸ்பூன், நறுக்கிய குடமிளகாய் – அரை கப், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், ஏதாவது ஊறுகாயில் உள்ள தொக்கு மட்டும் – ஒரு கரண்டி, தயிர் – 3 டீஸ்பூன், கொத்தமல்லித் தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.
தாளிக்க: கடுகு – ஒரு டீஸ்பூன், பிரிஞ்சி இலை – ஒன்று.

செய்முறை: வேக வைத்த மரவள்ளிக் கிழங்கை மசித்து, கோஃப்தா செய்வதற்குரிய பொருட்களை அதனுடன் கலந்து பிசைந்து உருண்டைகளாக செய்யவும். மைதா, சோள மாவு, உப்பு மூன்றையும் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து, அதில் செய்துவைத்த உருண்டைகளை நனைத்து, எண்ணெயில் பொரிக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பிரிஞ்சி இலை தாளித்து… உப்பு, வெங்காய விழுது, தக்காளி விழுது போட்டு வதக்கி… குடமிளகாய். சீரகத்தூள், ஊறுகாய் தொக்கு சேர்த்து நன்கு வதக்கி, தயிர் விட்டு, கொத்தமல்லி தழை சேர்த்துக் கிளறவும். பொரித்த கோஃப்தா உருண்டைகளை மெதுவாக போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கினால்… சூப்பர் சுவையில் ஆல்வள்ளி கோஃப்தா கிரேவி ரெடி.

Leave a Reply