செட்டிநாடு மசாலா பணியாரம்

தேவையானவை:  

பச்சரிசி – ஒரு கப், உளுந்து – முக்கால் கப், வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), கடுகு, கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு, கொத்தமல்லித் தழை – கால் கப், பச்சை மிளகாய் – 5, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:  

அரிசி, உளுந்தை தனித்தனியாக ஒரு மணி ஊற வைக்கவும். வெங்காயம், கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கவும். முதலில் உளுந்துடன் பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர் அதிகம் விடாமல்  கெட்டியாக அரைக்கவும். பிறகு, அரிசியை தனியாக கெட்டியாக அரைக்கவும்.

வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெயைக் காயவிட்டு கடுகு சேர்த்து, நன்கு வெடித்த பின் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த அரிசி மாவு, உளுந்து மாவு, வதக்கிய வெங்காய கலவை, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து, சற்று தளர்வாக பிசையவும். மாவை காய்ந்த எண்ணெயில் போண்டா போல கிள்ளி போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: கடுகு நன்கு வெடிக்காவிட்டால், பணியாரம் எண்ணெயில் போடும்போது வெடிக்கும். உளுந்துக்கு தண்ணீர் அதிகம் விட்டு அரைத்தால், எண்ணெயைக் குடிக்கும்.

Leave a Reply