பெங்காலி ஆலு மசாலா

தேவையானவை: 

உருளைக்கிழங்கு – கால் கிலோ, மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்,  ஏலக்காய், பட்டை – தலா ஒன்று, தனியா – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, வெங்காயம், தக்காளி – தலா 2, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், தயிர் – 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை: 

உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, பெரிய துண்டுகளாக்கி எண்ணெயில் பொரிக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். சீரகம், மிளகு, ஏலக்காய், பட்டை, தனியா, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு இஞ்சி – பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், தயாராக வைத்திருக்கும் மசாலா பொடி சேர்த்து வதக்கி… உப்பு, பொரித்த உருளை துண்டுகள், தயிர் சேர்த்து சுருள கிளறி இறக்கி, பரிமாறவும்.

Leave a Reply