பீநட் பட்டர்

என்னென்ன தேவை?

வேர்க்கடலை – 1 கப்,
சமையல் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு – 1/4 டீஸ்பூன், தேன் – 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

வேர்க்கடலையை வறுத்து தோலை நீக்கி வைக்கவும். மிக்ஸியில் வேர்க்கடலையை பொடிக்கவும். மிக்ஸியின் ஓரங்களில் வேர்க்கடலை விழுது ஒட்டிக்கொண்டிருக்கும். வேர்க்கடலையில் எண்ணெய் இருப்பதால் இப்படி ஆகும். ஒட்டிக்கொண்டிருக்கும் விழுதையும் போட்டு எண்ணெய், தேன், உப்பு சேர்த்து விட்டு விட்டு அரைக்கவும். சுவையான க்ரீமியான பீநட் பட்டர் தயார். பிரெட்டில் தடவி பழங்களுடன் தோய்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

Leave a Reply