ஆலு மேத்தி சப்பாத்தி

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு – 3
வெந்தைய கீரை – 3 கட்டு
கோதுமை மாவு  – 2 கப்
வெண்ணெய் – 4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ப.மிளகாய் – 2
வெங்காயம் – 2
கடுகு, சீரகம் – 1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை :

• கோதுமை மாவில் சிறிது வெண்ணெய், உப்பு போட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைத்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

• உருளைக்கிழங்கை வேக வைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

• வெங்காயம்,கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• வெந்தயக்கீரையை சுத்தம் செய்து இலையை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.

• கடாயில் வெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம் தாளித்து ப.மிளகாய், வெங்காயம் போட்டு சிறிது வதக்கவும். பின் உருளைக்கிழங்கு, வெந்தயக்கீரை, தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கிளறவும். கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி ஆற வைக்கவும்.

• மாவை உருட்டி அதன் நடுவே உருளைக்கிழங்கு கலவையை சிறிது வைத்து மூடி சப்பாத்திகளாக செய்து வைக்கவும்.

• தோசை கல்லை அடுப்பில் வைத்து உருட்டி வைத்துள்ள சப்பாத்தியை போட்டு சுற்றி வெண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

• இதற்கு காய்ந்த வெந்தயக்கீரையையும் பயன்படுத்தலாம்.

Leave a Reply