மட்டர் பூரி : செய்முறைகளுடன்…!

தேவையான பொருட்கள்:
கோதுமை – 2 கப்
ரவை – 1 கரண்டி
ப.பட்டாணி – 1 கப்
கொத்தமல்லி தழை – கொஞ்சம்
உப்பு – தேவைக்கேற்ப
ஓமம்- 1 கரண்டி
பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப
பெருங்காயம் – சிறிதளவு
இஞ்சி – ஒரு சிறு துண்டு
எண்ணெய் – பொரிக்க

செய்முறை :
பச்சைப்பட்டாணி, ஓமம், இஞ்சி, கொத்தமல்லி தழை, பெருங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ள வேண்டும்.

மைதா/கோதுமை மாவினை தேவையான உப்பு, இரண்டு கரண்டி எண்ணெய், ஒரு கரண்டி ரவை [பூரி மொறுமொறுவென இருக்க] ஆகியவற்றை தேவையான அளவு வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு பிசைந்து கொள்ளவும்.

அரைத்து வைத்த விழுதினை மாவிலேயே போட்டு பிசைந்து கொண்டாலும் சரி, இல்லை எனில் தனியாக வைத்துக் கொண்டு பூரிகளை இட்டு, பின் ஸ்டஃப் செய்யலாம்.

மாவை தயார் செய்து சிறிது நேரம் அப்படியே வைத்துவிடுங்கள்.

பூரிக்குத் தொட்டுக்கொள்ள ஏதாவது சப்ஜி செய்ய தயார் செய்து கொள்ளுங்கள்.

பொதுவாக மட்டர் பூரியோடு உருளைக் கிழங்கு சப்ஜி தான் நன்றாக இருக்கும்.

பூரி மாவை சிறிய உருண்டைகளாக்கி, அவற்றை பூரிக் கட்டையைக் கொண்டு சிறிய சிறிய பூரிகளாக இட்டுக்கொள்ளுங்கள்.

கனமான அடி கொண்ட பாத்திரத்தில் எண்ணெயைச் சூடாக்கி பூரிகளைப் பொரித்து எடுங்கள்.

சுடச் சுட பூரியும், தொட்டுக்கொள்ள Baby Potato சப்ஜியும் நன்றாக இருக்கும்.

Leave a Reply