முட்டை சாட் மசாலா

தேவையான பொருட்கள் :

முட்டை – 3
வெங்காயம் – 1
தக்காளி – 1
சாட் மசாலா – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான பொருட்கள்
தக்காளி சாஸ் – தேவையான அளவு
ஓமம் – சிறிதளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை :

• முட்டையை அவித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

• வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• தக்காளி சாஸ், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

• முட்டையில் மேல் தக்காளி சாஸ் கலவையை ஊற்றி அதன் மேல் சாட் மசாலாவை தூவவும்.

• பின்னர் அதன் மேல் ஓமத்தை கைகளால் நன்றாக கசக்கி அதன் மேல் தூவவும்.

• கடைசியாக கொத்தமல்லி தூவி பறிமாறவும்.

Leave a Reply