கொண்டைக்கடலை – மாங்காய் சுண்டல்

எண்ணெய் சேர்க்காமல் சுவையான சுண்டல் தயார் செய்வது எப்படி?
என்பதை இங்கே காணலாம்.

கொண்டைக்கடலை-1 கப்,
மாங்காய்- பாதி அளவு,
மிளகாய்-1,
எலுமிச்சம்பழம்-1
உப்பு தேவைக்கு ஏற்ப.

தாளிப்பதற்கு

கடுகு- 1 தேக்கரண்டி,
உளுந்தம் பருப்பு-1 தேக்கரண்டி,
பெருங்காயத் தூள்-1 சிட்டிகை,
வத்தல்-1
கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை:-

• கொண்டைக்கடலையை 8 மணி நேரம் தண்ணீரில் நன்றாக ஊற விட வேண்டும். பின்னர் அதை குக்கரில் வேக வைக்க வேண்டும்.

• வாணலியை சூடாக்கி, தாளிக்கும் பொருட்களை அதில் போட்டு, கடுகு வெடித்ததும் ஏற்கனவே வேகவைத்து எடுத்த கடலையை அதில் சேர்க்க வேண்டும்.

• பொடியாக நறுக்கிய மாங்காய், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும். எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலந்த பிறகு, அடுப்பில் இருந்து இறக்கி வைத்து, அதில் எலுமிச்சம் பழத்தின் சாற்றை பிழிய வேண்டும்.

• இப்போது சுவையான சுண்டல் ரெடியாகி விடும்.

Leave a Reply