Omelet Quesadilla Recipe – Instant Breakfast Ideas

எளிதில் செய்ய கூடிய சத்தான காலை நேர உணவு. இதில் காய்கள் , முட்டை , Tortilla எல்லாம் சேர்த்து செய்வதால் உடலிற்கு தேவையான Carbs, Protein, Vitamins & Minerals கிடைக்கின்றது.

எப்பொழுதும் பச்சை குடைமிளகாய் மட்டும் சேர்க்காமல் அனைத்து கலர் குடைமிளகாயினையும் சேர்த்து கொள்ளவும். கலர் குடைமிளகாயில் சத்துகள் கூடுதலாக இருக்கின்றது.

Multigrain Tortilla பயன்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கு

நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.,..

சமைக்க தேவைப்படும் நேரம் :8 – 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
. Tortilla – 1 பெரியது / 2 சிறியது
. முட்டை – 2
. குடைமிளகாய் – 2 – 3 மேஜை கரண்டி பொடியாக நறுக்கியது
. வெங்காய தாள் – 1 பொடியாக நறுக்கியது
. உப்பு , Cheese – சிறிதளவு
. எண்ணெய் – தேவையான அளவு


செய்முறை ;
. குடைமிளகாய் + வெங்காய தாளினை சுத்தமாக கழுவி கொண்டு அதனை மிகவும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
(நான் இதில் அனைத்து வித கலர் குடைமிளகாயினையும் சேர்த்து செய்து இருக்கின்றேன். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப காய்கள் சேர்த்து கொள்ளவும். )


. முட்டையினை உடைத்து அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அத்துடன் 1 மேஜை கரண்டி தண்ணீர் சேர்த்து, Fork வைத்து நன்றாக அடித்து கொள்ளவும்.

(கவனிக்க : கண்டிப்பாக தண்ணீர் / பால் சேர்த்து Fork வைத்து கலக்கினால் தான் Omelet மிகவும் Fluffyயாக நன்றாக வரும். )


. இத்துடன் நறுக்கி வைத்துள்ள காய்கள் + தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.


. Omelet Panயினை சூடுபடுத்தி கொண்டு அதில் சிறிது எண்ணெயினை Brush செய்து கொள்ளவும்.

. அதில் கலந்து வைத்து இருக்கும் கலவையினை ஊற்றி மிதமான தீயில் வேகவிடவும்.


. ஒரு பக்கம் வெந்த பிறகு அதனை திருப்பி போட்டு மேலும் 1 நிமிடம் வேகவிடவும். இப்பொழுது ஆம்லெட் ரெடி.

. தோசை கல்லினை காயவைத்து கொள்ளவும். அதில் சிறிது எண்ணெயினை Brush செய்து அதில் Tortillaவினை வைக்கவும்.

. அதன் ஒரு பகுதியில் ஆம்லெட், சீஸ் என்று வைத்து அப்படியே 30 Seconds வைக்கவும்.

. பிறகு Tortillaவினை மடக்கிவிட்டு மேலும் 30 Seconds வேகவிடவும்.


. இப்பொழுது Omelet Quesadilla ரெடி. இதனை வெட்டி சிறிய துண்டுகளாக பறிமாறலாம்.

Leave a Reply