இலங்கை – ருலங் அலுவா (Rulang Aluwa)

ரவை – அரை கப்
ப்ரவுன் சர்க்கரை – கால் கப்
நெய் / வெண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
பேரீச்சம் பழம் – 5
முந்திரி – 5
உப்பு – ஒரு சிட்டிகை
வெனிலா எசன்ஸ் – அரை தேக்கரண்டி
பால் – அரை கப்

பாலை கொதிக்க வைத்து சூடாக வைத்திருக்கவும்.

முந்திரி மற்றும் பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கடாயில் ரவையைப் போட்டு சிவக்க வறுக்கவும்.

அதனுடன் வெண்ணெய் சேர்த்து கலக்கவும். பிறகு சர்க்கரை, பொடியாக நறுக்கிய பேரீச்சை மற்றும் முந்திரி சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும்.

அதில் சூடான பாலை ஊற்றி கலந்து மூடி விடவும்.

5 நிமிடங்கள் சிறு தீயில் வைத்து கிளறி இறக்கி, நெய் தடவிய தட்டில் பரவலாகக் கொட்டி அழுத்தி விடவும்.

சுவையான ருலங் அலுவா தயார். ஆறியதும் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

Leave a Reply