மாகாளிக் கிழங்கு ஊறுகாய்

என்னென்ன தேவை?

மாகாளிக்கிழங்கு (நறுக்கியது ¼ கப்),
கடுகு ¼ கப்,
விரளி மஞ்சள் – 5 துண்டு,
காய்ந்த மிளகாய் – 1 பிடி,
தயிர் – 2 கப்,
உப்பு – தேவைக்கேற்ப.

எப்படி செய்வது?

மாகாளிக்கிழங்கை நறுக்கி நடுவில் உள்ள வேர்ப்பகுதியை நீக்க வேண்டும். நறுக்கிய கிழங்கை மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும். அப்போதுதான் கறுக்காமல் இருக்கும். கடுகு, மஞ்சள், காய்ந்த மிளகாயை பச்சையாக மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். மோரில் போட்ட கிழங்குத் துண்டுகளை பிழிந்து எடுத்து அரைத்த தயிர் கலவையில் போட்டு, உப்பு சேர்த்துக் குலுக்கி உபயோகிக்க வேண்டியதுதான். இந்த ஊறுகாயில் துளிக்கூட எண்ணெய் இல்லை என்பதால் கொலஸ்ட்ரால் பற்றிக் கவலையில்லை. உப்பு ஆகாது என்பவர்கள் அதையும் குறைத்துக் கொள்ளலாம். 2 வருடங்கள்கூட இந்த ஊறுகாயை வைத்திருந்து உபயோகிக்கலாம். அன்றன்று மோர் விட்டுக் கலக்கிக் கொள்ளலாம்.

Leave a Reply