முட்டை பொரியல்

தேவையான பொருட்கள்
முட்டை – 4
பெரிய வெங்காயம் – 3
பச்சைமிளகாயம் – 2
மிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 2 கொத்து
கடுகு – 1/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1/4 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் – 2 சிட்டிகை
எண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி

செய்முறை
1. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை துண்டாக வெட்டிக்கொள்ளவும். 

2. முட்டையை உடைத்து ஒரு பத்திரத்தில் ஊற்றிக்கொள்ளவும்.

3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, ஊளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

4. அடுத்து பச்சைமிளகாயையும், பெருங்காயத்தையும் போட்டு வதக்கவும்.

5. இதில் முட்டையை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, உப்பு போட்டு அடிப்பிடிக்காமல் மிதமான தீயில் கிளறிக்கொண்டே இருக்கவும்.

6. முட்டை உதிரி உதிரியாக ஆனதும் மிளகுத்தூளையும், நறுக்கிய கறிவேப்பிலையும் போட்டு கிளறி அடுப்பிலிருந்து இறக்கிவைக்கவும்.

Leave a Reply