தக்காளி ஜாம்

தேவையானவை:
பழுத்த தக்காளி – 1 கிலோ
பச்சைமிளகாய் – 1
சர்க்கரை – அரை கிலோ
சிவப்பு ஃபுட் கலர் – 1 சிட்டிகை
பன்னீர் – 1 டீஸ்பூன்
முந்திரி, திராட்சை – 10 கிராம்
நெய் – 2 டீஸ்பூன்

செய்முறை:
தக்காளி, பச்சை மிளகாயை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் 5 நிமிடம் கொதிக்க விடவும். அடுப்பை அணைக்கவும். ஆறியதும் தக்காளியின் தோல் நீக்கி மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். பெரிய கண்ணுள்ள வடிகட்டியில் தக்காளியைச் சேர்த்து வடிகட்டவும். தக்காளி சக்கையை மிக்ஸியில் மீண்டும் அரைத்து வடிகட்டவும். இதனை அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். கலவை நன்கு சுண்டி வரும் போது சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். ஜாம் சுண்டியதும் இறுதியாக நெய் பொடியாக நறுக்கிய முந்திரி கிஸ்மிஸ் சேர்த்து பன்னீர் சேர்த்து கலந்து ஃபுட் கலர் சேர்க்கவும். ஜாம் திரண்டு வரும் போது இறக்கவும்.

Leave a Reply