முருங்கக்காய் குழம்பு

தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய்……………2
சின்ன வெங்காயம்………100 கிராம்
புளி………………….…………….எலுமிச்சை அளவு
தேங்காய்………………………4 தேக்கரண்டி
தக்காளி……………….…………. 1
சீரகம்………………..……………1 /2 தேக்கரண்டி
பூண்டு………………..…………10 பல்
கடுகு ……………………..……….1 /2 தேக்கரண்டி
பெ.சீரகம் ……………………..…..1 /2 தேக்கரண்டி
மிளகாய் தூள்…………….3 தேக்கரண்டி
மஞ்சள் பொடி………………..கொஞ்சம்
நல்லெண்ணெய் …………..2 தேக்கரண்டி
வெந்தயம்……………………..1 /2 தேக்கரண்டி
கறிவேப்பிலை……………….1 கொத்து

செய்முறை:

புளியை ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும். முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை உரித்து, பொடியாக நறுக்கவும். தேங்காய், தக்காளி ,சீரகத்தை நன்றாக அரைத்து 6 வெங்காயத்தை தட்டி எடுக்கவும்.
அடுப்பில் சட்டியை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெந்தயம் ,கடுகு, பெ.சீரகம் போட்டு, சிவந்த தும், வெங்காயம்,பூண்டு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், முருங்கைகாய் போட்டு , அதிலேயே மிளகாய் தூள், மஞ்சள் பொடி போட்டு கொஞ்சம் பிரட்டி, அதிலேயே அரைத்த விழுதையும் கரைத்த புளியை விடவும்.பின் உப்பு போடவும். ஒரு டம்ளர் நீர் ஊற்றவும்.

குழம்பு நன்கு கொதித்து, காய் வெந்ததும், குழம்பு பக்குவம் வந்து, கெட்டியாகி விட்டால்,பூண்டு இரண்டு தட்டிப் போட்டு இறக்கவும். முருங்கைக்காய் குழம்பு தாளிக்கும்போதே, வாசனை சுண்டி இழுக்கும்.

Leave a Reply