மாம்பழ ஐஸ்க்ரீம்

தேவையானவை:
மாம்பழங்கள் – 3
தயிர் – 100 மில்லி
தேன் – 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை – 30 கிராம்

செய்முறை:
மாம்பழங்களின் சதைப்பகுதியுடன் தேவையானவற்றில் உள்ள மற்ற அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இதனை ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு மணி நேரம் கழித்து எடுத்து முட்டை அடித்துக் கலக்கும் கருவியால் கலவையை நன்கு அடித்து மீண்டும் ஃஒரிட்ஜில் வைக்கவும். இப்படி மூன்று அல்லது நான்கு முறை கலவையை எடுத்து அடித்து பின்னர் உள்ளே வைத்து ஆறு மணி நேரம் கழித்து ஐஸ்க்ரீம் கோன்களில் வைத்து பரிமாறவும்.

Leave a Reply