வெண்பொங்கல்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 1 1/2 கோப்பை
பாசிப்பருப்பு – 1/2 கோப்பை
மிளகு – 4 தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
துருவிய இஞ்சி – 3 தேக்கரண்டி
நெய் – 1/2 கோப்பை
முந்திரிப்பருப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

 • அரிசியைக் கழுவியபின், 6 கோப்பை தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும்.
 • பாசிப்பருப்பை வறுத்து, பெருங்காயம் சேர்த்து, சுமார் 10 நிமிடம் வேகவைக்கவும்.
 • அரிசி உருமாறிச் சாதம் ஆகத் தொடங்கும்போது பாசிப்பருப்பு, உப்பு சேர்க்கவும்.
 • துருவிய இஞ்சியில் 1 தேக்கரண்டி அரிசி, பருப்புடன் சேர்க்கவும்.
 • தீயைச் சிறிதாக வைத்து, மூடிவைத்து, அவ்வப்போது கிளறவும்.
 • தண்ணீர் அளவு குறைந்து, பொங்கல் முக்கால் பதத்தில் இருக்கும் போது, வாணலியில் 3 தேக்கரண்டி நெய் விட்டு, சூடானதும், ஒன்றிரண்டாகப் பொடித்த மிளகு, சீரகம், மீதமிருக்கும் இஞ்சித்துறுவல், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, அரிசி பருப்புடன் சேர்த்துக் கிளறவும்.
 • நன்கு குழைந்து வெந்ததும், மீதமிருக்கும் நெய்யை ஊற்றிக் கிளறி, 2 அல்லது 3 நிமிடங்களுக்கு அடுப்பில் வைத்துப் பின் இறக்கவும்.
 • நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு சேர்க்கவும்.

குறிப்பு:

 • குக்கரில் வைக்கும்போது எல்லாவற்றையும் ஒரே நேரத்திலேயே வைத்து விடலாம்…தாளிப்பைத் தவிர…
 • குக்கரில் செய்வதை விட இந்த ருசி சிறப்பாக இருக்கும். அளவும் அதிகமாக வரும்.
 • காரம் சற்று அதிகமாக வேண்டுமென்றால், பச்சை மிளகாய் (அரிசி வேகும்போது) சேர்த்துக்கொள்ளலாம்.
 • அக்மார்க் ருசிக்கு இவ்வளவு நெய் தேவை..மற்றபடி ஆரோக்கியம் கருத்தில் கொண்டு குறைத்துக் கொள்ள வேண்டியதுதான்..

Leave a Reply