கேரட் மேத்தி பொரியல்

என்னென்ன தேவை?

கேரட் – 2,
வெங்காயம் – 1,
வெந்தயக்கீரை – 1 கைப்பிடி,
மிளகாய்தூள் – 1/2 டீஸ்பூன்,
சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் – 1 டீஸ்பூன்,
கடுகு – சிறிது.

எப்படிச் செய்வது?

கேரட், வெங்காயம், வெந்தயக்கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, கடுகு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய கேரட் சேர்த்து 2 நிமிடங்கள் சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள் சேர்க்கவும். வெந்தயக்கீரையை சேர்த்து வதக்கவும். 5 நிமிடங்கள் மிதமான தீயில் தண்ணீர் தெளித்து வதக்கி உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும். அடுப்பை அணைத்து சூடாக சப்பாத்தி அல்லது சாதத்துடன் பரிமாறவும்.

Leave a Reply