முட்டை மசாலா

தேவையான பொருட்கள்
முட்டை – 4
பெரிய வெங்காயம் – 2
இஞ்சி – சிறிதளவு
பூண்டு – 4
மிளகாய்த்தூள் – 1தேக்கரண்டி
சீரகம்.- 1/2 தேக்கரண்டி
எலுமிச்சம்பழச்சாறு – 1 தேக்கரண்டி
தக்காளி – 2
தேங்காய்ப்பால் – 1/2 கப்
உப்பு , எண்ணெய் , வாசனைத்தூள்- தேவையான அளவு

செய்முறை
முட்டையை நன்கு அவித்து கோது நீக்கி இரண்டாக வெட்டி வைக்கவும்.
வெங்காயத்தை , தக்காளியை சுத்தம் செய்து சிறிதாக நறுக்கவும்.
இஞ்சியையும் உள்ளியையும் துவைக்கவும்.
அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் விட்டு கறிவேப்பிலை , சீரகம், வெங்காயத்தையும் நன்றாக வதக்கவும்.
வதங்கியதும் அதனுள் தக்காளி ,இஞ்சி , உள்ளித்துவையல் போட்டு கிளறவும்.
பின் மிளகாய்த்தூள் , மல்லித்தூள் சேர்த்து தேங்காய்ப்பால் விட்டு நன்கு கலக்கி கொதிக்க வைக்கவும்.
கலவை கெட்டியானதும்
கலவையில் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து முட்டையையும் பிரட்டி வாசனைத்தூள் சேர்த்து இறக்கவும் .
முட்டை மசாலா ரெடி

Leave a Reply