சீஸ் பிஸ்கெட்

என்னென்ன தேவை?

மைதா மாவு – 1 கப்,
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்,
சீஸ் – 50 கிராம்,
உப்பு – 1 சிட்டிகை,
வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் – பொரிப்பதற்கு,
முந்திரித் துருவல் -2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

மைதாவை சலித்து கொண்டு உப்பு, மிளகுத்தூள், முந்திரித் துருவல் சேர்த்து சீஸ், வெண்ணெய் சேர்த்து நன்றாக பிசையவும். இருபது நிமிடம் மூடி வைக்கவும், பிறகு அந்த பிசைந்த மாவை சிறிது எடுத்து மொத்தமாக நீள வாக்கில் உருட்டி நான்கு பாகமாக பிரித்து மொத்தமான சப்பாத்தியாக இட்டுக் கொள்ளவும். அதை செவ்வக வடிவமாக வெட்டி சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். மாவு பிசையும் பதம் முக்கியம். இல்லை என்றால் மாவு தனி, சீஸ் தனியாக பொரிக்கும் போது பிரிந்து விடும்.

Leave a Reply