ஆட்டுக்குடல் வறுவல்

தேவையானவை

 

ஆட்டுக்குடல் – முக்கால் கிலோ

சின்ன வெங்காயம் (அ) பெரிய வெங்காயம் – அரை கிலோ

பச்சை மிளகாய் – 10

மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி

கரம் மசாலா – அரை தேக்கரண்டி

மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி

தேங்காய்ப்பூ – ஒரு கப்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை – தாளிக்க

செய்முறை

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். ஆட்டுக்குடலை கல் உப்பு போட்டுத் தேய்த்து ஓடும் நீரில் (Running Water) நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

குக்கரில் ஆட்டுக்குடலுடன் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் வேக வைக்கவும்.

வெந்ததும் தண்ணீரை வடிகட்டிவிட்டு குடலைத் தனியாக எடுத்து வைக்கவும்.

கடாயில் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன் வேக வைத்த குடலைச் சேர்த்து, மிளகாய்த் தூள், கரம் மசாலா மற்றும் உப்புச் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும்.

பிறகு தேங்காய்ப்பூவைச் சேர்த்துக் நன்கு கிளறிவிடவும்.

தீயின் அளவை அதிகரித்து 5 நிமிடங்கள் கைவிடாமல் கிளறி, இறக்கவும்.

Leave a Reply