நெய்ச்சோறு

தேவையானவை

சம்பா அரிசி           – 1kg
உருளைக்கிழங்கு   – 750g
நெய்                     – 100g
கயு                      – 50g
பிளம்ஸ்               – 50g
ஏலக்காய்ப் பொடி    – அளவுக்கு
கறிவேப்பிலை       –  அளவுக்கு
கறிமிளகாய்          – 100g
வெங்காயம்           – 250g
உப்பு                    – அளவுக்கு
மஞ்சள்த்தூள்        – அளவுக்கு
எண்ணெய்            – 500ml
கத்தரிக்காய்          – 750g

செய்முறை

உருளைக்கிழங்கையும், கத்தரிக்காயையும் சிறிது சிறிதாக வெட்டி உப்பு, மஞ்சள் போட்டு பொரிக்க வேண்டும். பின் கயுவையும் சிறிது சிறிதாக வெட்டி பொரிக்க வேண்டும். பிளம்ஸையும் பொரித்தெடுக்க வேண்டும். பின் பானையில் நீர் விட்டு நீர் கொதித்ததும் அரிசியைப்போட்டு அவியவிட வேண்டும். சோறு அவிந்ததும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய்விட்டு வெட்டிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை என்பனவற்றை வதக்கி பின் சோறை அதனுள்ப் போடவேண்டும் இப்போது பொரித்து வைத்த அனைத்தையும் அதனுள்ப் போட்டுக் கிளறி தேவையான அளவு உப்பு, மஞ்சள் என்பவற்றை போட வேண்டும். இறுதியாக ஏலக்காய்ப் பொடியையும் போட்டால் சுவையான நெய்ச்சோறு தயாராகிவிடும்.

Leave a Reply