வெஜ் ஸ்பிரிங் ரோல்

என்னென்ன தேவை?

மீதமான சப்பாத்தி – 4,
நீளமாக நறுக்கிய கோஸ், கேரட், வெங்காயம், பச்சை மிளகாய் – மொத்தமாக 1 கப்,
வேகவைத்த சைனீஸ் நூடுல்ஸ் – 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
மிளகுத் தூள் – சிறிது,
சோயா சாஸ் – 1 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை – 1 சிட்டிகை.

பேஸ்ட் தயாரிக்க…

மைதா – 1 டேபிள்ஸ்பூன்,
தண்ணீர் – சிறிது.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் ஊற்றி லேசாக காய்ந்ததும் 1 சிட்டிகை சர்க்கரையைப் போடவும். உடனே நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை சேர்த்து அதிக தீயில் வதக்கவும். பிறகு, நூடுல்ஸ் சேர்த்து, சோயா சாஸ், மிளகுத் தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். மைதாவுடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ளவும். சப்பாத்தியை எடுத்து நடுவில் இந்த காய் நூடுல்ஸ் ஸ்டஃபிங்கை உள்ளே வைத்து, மைதா பேஸ்ட்டால் ஓரங்களை மூடவும். 4 சப்பாத்திகளிலும் ஸ்டஃபிங்கை வைக்கவும்.

ஒரு நான்ஸ்டிக் கடாயை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி ஸ்டஃப் செய்த சப்பாத்திகளை அடுக்கி, மூடி வைத்து சிம்மில் வைக்கவும். இடையில் ஒருமுறை திருப்பி விடவும். சூடாக தக்காளி சாஸுடன் பரிமாறவும்.,நூடுல்ஸ் விரும்பினால் சேர்க்கலாம். சேர்க்காமலும் செய்யலாம்.

Leave a Reply