கேசரி (kesary)

தேவையான பொருட்கள்: 

ரவை – 250 கிராம்
நெய் – 100 கிராம்
முந்திரிப்பருப்பு – 25 கிராம்
சர்க்கரை – 150 கிராம்
உலர் திராட்சை – 25 கிராம்
ஏலக்காய் – 10 கிராம்
கேசரிப்பவுடர் – அரைத்தேக்கரண்டி

செய்முறை:

வாயகன்ற பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு அடுப்பில் வைக்க வேண்டும். நெய் காய்ந்ததும் முந்திரி, உலர் திராட்சையைப் போட்டு ஒரு புரட்டு புரட்டி அரை லிட்டர் தண்ணீர் விட வேண்டும்.

தண்ணீர் கொதிக்கும்போது ரவையைப் போட்டு வேகவிட வேண்டும். அடிப்பிடிக்காவண்ணம் அவ்வபோது கிளறி விட்டுக் கொள்ள வேண்டும்.

தண்ணீர் சுண்டி ரவை வெந்ததும் சர்க்கரையைப் போட்டுக் கிளற வேண்டும். சர்க்கரையும் ரவையும் சேர்த்து இளகியதும் நெய் சிறிது விட்டு கிளற வேண்டும்.

கேசரி தளரும்போதெல்லாம் நெய் விட்டுக் கிளறிக்கொண்டே வர வேண்டும். கடைசியில் கேசரிபவுடருடன் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் பாத்திரத்தில் ஒட்டாவண்ணம் கிளற வேண்டும்.

Leave a Reply