மேயனைஸ் – பெஸ்தோ சாஸ் வித் சாண்ட்விச்

என்னென்ன தேவை?

பிரெட் ஸ்லைஸ் – தேவைக்கேற்ப,
3 முட்டையில்லாத மேயனைஸ் சாஸ் – தேவைக்கேற்ப,
இத்தாலியன் பெஸ்தோ சாஸ்-தேவைக்கேற்ப,
தக்காளி சாஸ் – சிறிது,
நறுக்கிய கொத்தமல்லி – 2 டேபிள்ஸ்பூன்,
நெய் – சிறிது, பீநட் பட்டர் – தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

பிரெட்டின் ஓரங்களை நீக்கவும். ஒரு லேயரில் பீநட் பட்டர் தடவவும். அடுத்த லேயரில் மேயனைஸ் சாஸ், அதற்கடுத்த லேயரில் பெஸ்தோ சாஸ் தடவி கொத்தமல்லி தூவி இன்னொரு பிரெட் ஸ்லைஸால் மூடி பிரெட் டோஸ்டரில் அல்லது தோசைக்கல்லில் சிறிது நெய் விட்டு டோஸ்ட் செய்து எடுக்கவும். பிறகு அடுக்காக அப்படியே வெட்டி தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

Leave a Reply