வெண்டைக்காய் தயிர் கிச்சடி

என்னென்ன தேவை?

வெண்டைக்காய் – 10,
தயிர் – ஒரு கப்,
பச்சை மிளகாய் – 5,
சீரகம் – 1 டீஸ்பூன்,
தேங்காய் – 1 மூடி,
கடுகு, கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய் – தாளிக்கத் தேவையான அளவு,
உப்பு – தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?

வெண்டைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயையும் நறுக்கி வைக்கவும்.

கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதில் வெண்டைக்காயையும் பச்சை மிளகாயையும் போட்டு வதக்கவும்.

தேங்காய், சீரகத்தை மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். அரைத்த தேங்காயை வெண்டைக்காயில் போட்டு நன்றாகக் கிளறவும்.

அதை இறக்கி வைத்து, உப்பு சேர்த்து தயிரை ஊற்றவும். வெண்டைக்காய் தயிர் கிச்சடி ரெடி.

Leave a Reply