பனீர் புலாவ்

தேவையானவை:

பாசுமதி அரிசி – ஒரு கிலோ,

பனீர் – 200 கிராம்,

நெய் – 100 கிராம்,

பட்டை, ஏலக்காய், சீரகம், கிராம்பு – தலா 5 கிராம்,

பிரியாணி இலை –  சிறிதளவு,

புதினா – 25 கிராம்,

கொத்தமல்லித் தழை – 50 கிராம்,

பால் – 100 மில்லி,

பச்சை மிளகாய் – சிறிதளவு,

இஞ்சி, பூண்டு – தலா 50 கிராம்,

சர்க்கரை – ஒரு சிட்டிகை,

எண்ணெய் – 100 மில்லி,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், சீரகம், கிராம்பு, பிரியாணி இலை, புதினா, கொத்த மல்லித் தழை, இஞ்சி – பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அரிசியின் அளவில் ஒன்றரை பங்கு தண்ணீர் ஊற்றி, பால், சர்க்கரையையும் சேர்த்து, கொதிக்க வைக்கவும். ஊற வைத்த அரிசியைச் சேர்த்து வேகவிட்டு, தண்ணீர் வற்றியதும், துருவிய பனீர், உப்பு சேர்க்கவும். பின்பு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, தண்ணீர் தெளித்து, புலாவ் இருக்கும் பாத்திரத்தை தோசைக்கல் மீது வைத்து மூடி வைக்கவும் (அடுப்பை சிறு தீயில் வைக்கவும்). 20 நிமிடம் கழித்து இறக்கும்போது நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Leave a Reply